திருக்கழுக்குன்றம் திருமலை பெளர்ணமி கிரிவலம் பிப்ரவரி 11 செவ்வாய் மாலை 06.55PM Next Pournami Girivalam Starting Time 11th February 2025 6:55 PM, Ending Time 12th February 2025 7:28 PM
Thirukalukundram Temple Girivalam Dates
திருக்கழுக்குன்றம் திருக்கோவில் கிரிவலம் தேதி
Girivalam Starting Time – 05:04 AM, Jan 13 Girivalam Ending Time – 03:57 AM, Jan 14 ஜனவரி 13 திங்கள் காலை 05.03
February Pournami – February 11, 2025 Tuesday)Girivalam Starting Time – 06:55 PM, Feb 11 Girivalam Ending Time – 07:22 PM, Feb 12 பிப்ரவரி 11 செவ்வாய் மாலை 06.55
March Pournami – March 13, 2025 ThursdayGirivalam Starting Time – 10:35 AM, Mar 13 Girivalam Ending Time – 12:23 PM, Mar 14மார்ச் 13 வியாழன் காலை 10.35
April Pournami – April 12, 2025 SaturdayGirivalam Starting Time – 03:21 AM, Apr 12 Girivalam Ending Time - 05:51 AM, Apr 13ஏப்ரல் 12 சனி காலை 03.21
May Pournami – May 11, 2025 SundayGirivalam Starting Time – 08:01 PM, May 11 Girivalam Ending Time – 10:25 PM, May 12மே 11 ஞாயிறு இரவு 08.01
June Pournami – June 10, 2025 TuesdayGirivalam Starting Time – 11:35 AM, Jun 10 Girivalam Ending Time – 01:30 PM, Jun 11ஜூன் 10 செவ்வாய் காலை 11.35
Girivalam Starting Time – 11:35 AM, Jul 10 Girivalam Ending Time – 01:30 PM, Jul 11ஜூலை 10 வியாழன் அதிகாலை 01.36
August Pournami – August 08, 2025 Friday )Girivalam Starting Time – 02:12 PM, Aug 08 Girivalam Ending Time – 01:24 PM, Aug 09 ஆகஸ்ட் 08 வெள்ளி பகல் 02.12
September Pournami –September 07, 2025 Sunday )Girivalam Starting Time – 08:40 PM, Oct 16 Girivalam Ending Time –04:55 PM, Oct 17செப்டம்பர் 07 ஞாயிறு அதிகாலை 01.41
October Pournami – October 06, 2025 Monday )Girivalam Starting Time – 12:23 PM, Oct 06 Girivalam Ending Time – 09:16 AM, Oct 07அக்டோபர் 06 திங்கள் பகல் 12.23
November Pournami –November 04, 2025 TuesdayGirivalam Starting Time – 10:36 PM, Nov 04 Girivalam Ending Time – 06:48 PM, Nov 05 நவம்பர் 04 செவ்வாய் இரவு 10.36
December Pournami –December 04, 2025 ThursdayGirivalam Starting Time – 08:37 PM, Dec04 Girivalam Ending Time – 04:43 AM, Dec 05 டிசம்பர் 04 வியாழன் காலை 08.37
Thirukalukundram Temple Girivalam திருக்கழுக்குன்றம் திருக்கோவில் கிரிவலம்
கிரி என்றால் மலை. வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவலம் எனப்படுகிறது. கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருவதாகும்.
கிரிவலம் செல்வதால் ஏற்படும் நன்மைகள்: செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். உடலின் ஆரோக்கியம் மேம்படும். சித்தர்களின் அருளானது கிடைக்கும். வறுமை நீங்கி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
திருக்கழுக்குன்றம் திருக்கோவில் கிரிவல பலன்கள்
எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன்?
ஞாயிற்றுகிழமை - சிவலோக பதவி கிடைக்கும், நோய்கள் நீங்கும். திங்கட் கிழமை - பாவ கணக்கு குறைந்து, புண்ணிய கணக்கு மேலோங்கும். செவ்வாய் கிழமை - கடன் தீரும், தீவினைகள் போகும், வறுமை நீங்கும், சகல சம்பத்துக்களும் தேடி வரும், கர்ம வினைகள் நீங்கும். என்ன நினைத்து கிரிவலம் செல்கிறோமோ எந்த காரியம் உடனே கைகூடும். புதன் கிழமை - கலைகளில் நல்ல வளர்ச்சி கிடைக்கும், மோட்சம் கிட்டும். வியாழக் கிழமை - குரு அருள் கிடைக்கும். ஞான சித்தி ஏற்படும். இந்த ஜென்மம் மட்டுமின்றி பல ஜென்ம குருமார்களின் ஆசியும் கிடைக்கும். வெள்ளிக் கிழமை - செல்வ நலன் கிடைக்கும். வைகுண்ட பேறு கிடைக்கும். குழந்தை பேறு கிடைக்கும். சனிக்கிழமை - பிறவிப் பிணி போகும். வியாபாரத்தில் உச்ச நிலை ஏற்படும். நவகிரக தோஷங்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்.Arulmigu Vedhagiriswarar Temple Girivalam
அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோவில் கிரிவலம்,திருக்கழுக்குன்றம்
Arulmigu vedhagiriswarar Temple

திருக்கழுக்குன்றம் நந்தி ரகசியம்
வேதகிரி மலையை சுற்றி மொத்தம் எட்டு திக்குக்கும் எட்டு நந்தி உள்ளது.
வேதகிரி மலையை சுற்றி மொத்தம் எட்டு திக்குக்கும் எட்டு நந்தி உள்ளது. அனைத்து நந்திகளும் மலைமேல் இருக்கும் சிவனை நோக்கியே அமைந்துள்ளது. மேலும் அனைத்து நந்திகளும் மலையை ஒட்டியே அமைந்துள்ளது.குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒவ்வொரு நந்தியும் அமைந்துள்ளது
Around Vedhagiriswarar Hill Tmple
Arulmigu Vedhagiriswarar temple Girivalam

Arasadi Vinayakar
Adivaram

kodi Vinayakar
Girivalam Road

Annakavadi Vinayakar
Girivalam Road Busstand

Subbiyah Swamigal
Girivala paathai

Thirumalai Chokkamman
Girivala paathai

Naalvar Temple
Girivala Paatahi
Arulmigu Vedhagiriswarar Hill Temple,Thirukalukundram
அருள்மிகு வேதகிரீஸ்வரர் மலை திருக்கோவில்,திருக்கழுக்குன்றம்
வேதமே மலையாக காட்சியளிப்பதால் கிரிவலம் வந்து இறைவன் அருளை பெற வேண்டும் என்று நால்வரால் தொடங்கப்பட்டது கிரிவலம். எனவே இத்தலத்தில் பௌர்ணமி கிரிவலம்(pournami giri valam) மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். திருவண்ணாமலைக்கு முன்பே இங்கு கிரிவலம் சிறப்பு வாய்ந்தாக இருந்திருக்கிறது. இப்போதும் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கிரிவலத்தின் (pournami girivalam)போது லட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்கின்றனர். மலை வலம் வரும் வழியில் மருந்து மலைச்சாரல் சஞ்சீவி காற்று வீசும் இடம் உள்ளது. இங்கு அமர்ந்து மூலிகை காற்றைச் சுவாசித்து பலனடைந்தோர் ஏராளம். நான்கு மலைத்தொடர்களில முலிகைகள் நிறைந்துள்ளதால் அன்றாடம் காலை நீராடி இம்மலைத் தொடரை பிரதட்சணமாக வந்தால் மூலிகை காற்றுப்பட்டு தீராத வியாதிகள் கூட போய்விடும். முக்கியமாக செவ்வாய்கிழமை கிரிபிரதட்சணம் செய்து இவ்விறைவனை வழிபடுவது சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
கிரிவலம் செல்லும்போது கடைபிடிக்க வேண்டியவை :
மலையைச் சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தப்படியே செல்ல வேண்டும். வெயில் அல்லது மழைக்காக குடை பிடித்து செல்லக்கூடாது. மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலையை வலம் வர தொடங்குவது சிறப்பு. கோபம் போன்ற உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சமநிலையில் இருக்கும்படியாக ஒருமித்த சிந்தனையோடு கிரிவலம் செல்ல வேண்டும். மலையை ஒட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு. தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்வது சிறப்பு. கிரிவலம் தொடங்கும் போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு. கிரிவலம் முடிந்ததும் குளிப்பதை தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.
Arulmigu vedhagiriswarar Temple

பெளர்ணமி கிரிவலம்
Arulmigu Vedhagiriswarar Temple Girivalam

பெளர்ணமி கிரிவலம்
பெளர்ணமி - அனைத்து நலன்களையும் தரக் கூடியது பெளர்ணமி கிரிவலம். எதை நினைத்து செல்கிறோமோ அதை நிறைவேற்றி, அத்தனை நலன்களையும் தரக் கூடியது. வாழ்நாளில் ஒருமுறையாவது கிரிவலம் செல்ல வேண்டும். ஞானம், செல்வம், வாழ்க்கை என அனைத்திலும் உயர்வை தரக்கூடியது கிரிவலம். அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் அற்புத சக்தி கிரிவலத்திற்கு உண்டு.
Thirukalukundram Temple
Shiva Temple in thirukalukundram
ஓர் அதிசய சம்பவம்.
1927-ம் வருஷத்தில் திண்டிவணம் தாலுகா ஜலபாதை என்னும் கிராமத்தில், யாதவ குலத்துதித்த குப்புசாமி என்னும் 35- வயது டையவர், கர்ம சோகத்தால் பீடிக்கப்பெற்று, செங்கல்பட்டு - திருமணியிலுள்ள குஷ்டரோக ஆஸ்பத்திரியில் பல நாள் சிகிச்சைக்கு உட்பட்டுச் சுகமொன்றும் ஏற்படாமல், திருக்கழுக்குன்றம் வந்து, பிரதக்ஷிணம் செய்து, மலை மருந்து எடுக்கு மிடமாகிய திருவடிக்கோயிலினிடமாகத் தங்கி, பிரதக்ஷிணம் செய்யும் கனவான்கள் கொடுத்த உணவைப் புசித்து, இராப்பகல் ஸ்ரீ வேதகிரிப் பெருமானை தியானம் செய்து கொண்டிருந்தார்.
பக்த பராதீனராகிய சிவபெருமான்,ஓர் நாள் அந்த கர்மரோகியின் சொப்பனத்தில், ஓர் பரதேசி ரூபமாகத் தோன்றி, மஞ்சள் புஷ்பம் புஷ்பிக்கும் அந்த வேம்பினடியை 1008-முறை பிரதக்ஷினம் செய்யும்படி உத்திரவு செய்து மறைந்தார். உத்திரவுபடி ஒரே தினத்தில் 1008-பிரதக்ஷிணம் செய்யத் தன் சரீரம் இடம் கொடாமையால், தினசரி 21-9 பிரதக்ஷிணமாக 48-நாள் பிரதக்ஷிணம் செய்து பூர்த்தி செய்தார்; ரோகத்தினால் பீடிக்கப்பெற்றிருந்த அவர் சரிரம் பொன்போல் விளங்குவதைக்கண்டு மகிழ்ந்தார்; தனக்குச் சுகத்தைத் தந்த அந்த இடத்துக்குத் தன்னால் கடிய கருமம் யாதாயினு மொன்று செய்ய மனங்கொண்டும், தனக்கு இயல்பு ஒன்றுமில்லையே யென்று வருத்தி நிற்கும் சமயத்தில், சென்னை சி-சஞ்சீவி செட்டி கம்பெனிக்குச் சொந்தக்காரர் அங்குவர, அவரிடம் தன் குறையிணை விண்ணப்பித்தார்; மேற்படி சஞ்சீவி செட்டியார் அவரது வேண்டுகோளை அங்கீகரித்து , இரா முழுதும் பிரகாசம் கொடுக்கும்படியான ஓர் திருவிளக்கு ஒண்றை ஏற்படுத்தி, அன்று முதல் இன்றுவரையும் இத்தரும தீபம் இடையூறின்றி, திருவடிக்கோயில் பூஜைசெய்யும் குழந்தை வேலுமுதலியார் மூல மாக நடந்து வருவதைப் பார்க்கலாம்.
இந்த திருவடிக்கோயில் பிரதக்ஷிண சாலை வடகோடியிலிருப்பதால், கோடீஸ்வர ரென்றும், சஞ்சீவி எடுக்குமிடத்திருப்பதால், சஞ்சீவிக் கோயிலென்றும், திருவடிப் பிரதிஷ்டை யிருப்பதால் திருவடிக்கோயிலென்றும் வழங்கி வருகிறது. 1981 பிப்ரவரிமீ 19 சுக்கிரவாரம் சென்னையில் வசிக்கும் குளத்தூர்-சோமு செட்டியார் குமாரர் தியாகராய செட்டியார் அவர்களால் சஞ்சீவி எடுக்குமிடத்தில் நாகலிங்கப் பிரதிஷ்டை செய்து, அதற்கு திருக்கழுக்குன்றம்-ஜ்வானாசாந்த குரு மூர்த்தி,ஸ்ரீலஸ்ரீ.தி. அ. சுப்பராய தேசிகர் அவர்களால் அஷ்ட பந்தன கும்பாபிஷேகம் நடத்தி, தினசரி அந்த நாகலிங்கத்துக்கு செட்டியார் அவர்கள் உதவியால், திருவிளக்கு பூஜை, நிவேதனம் நடந்தேறி வருகிறது.
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர்
கிரிப்பிரதக்ஷிண விதி:
கிரிப்பிரதக்ஷிணம் செய்வோர் விடியற்காலம் அதாவது சுமார் 4 -மணிக்கு எழுந்து, நித்தியக்கடன்கள் அதாவது மல ஜலம் கழி த்து, சங்கதீர்க்கத்தில் ஸ்நாகம் செய்து, நார்மடி அல்லது பட்டு அல்லது உலர்ந்த வஸ்திரம் உடுத்தி, விபூதி - ருத்திராக்ஷம் அல்லது திருமண்காப்பு அணிந்த, அவரவர் மதாசாரக் கொள்கைக் குரிய நித்தியானுஷ்டான ஜெப தபங்களை முடித்து, சிவ நாமம் அல்லது விஷ்ணுநாம உச்சரிப்போடு, வேதமலையைப் பிரதக்ஷணம் செய்தல் வேண்டும். பிரதக்ஷிணம் செய்யும் போது வீண் வார்த்தை பேசாயலும் குடும்பத்தொல்லைகளை நினையாமம்;பகவானை மனதில் நினைத்தல் வேண்டும்.
அடிவாரத்திலுள்ள ஸ்ரீ சிந்தாத்ரீ கணபதியைத் தரிசித்துக்கொண்டு, அரச மரத்தை காலை 10-மணி வரையும் பிரதக்ஷிணம் செய்யலாம். அதற்குமேல் பிரசுக்ஷிணம் செய்வது சாஸ்திர விரோதம். பிரதக்ஷணம் செய்து வரும்போது கோடி விநாயகர் கோயிலருகேயிருக்கும் ஸஞ்சீவி மலை மருநதைக் குறிக்கும். திருவடிக் கோயிலுக்கருகேயுள்ள மருத்திகையை ஜலத்தில் கலக்கி, உள்ளுக்குச் சாப்பிடலாம்; உடம்பிலும் பூசிக் கொள்ளலாம் இந்த இடத்திலுள்ள அதிசபமான மஞ்சள் புஷ்பம் புஷ்பிக்கும் வேப்பமரத்தைப் பிரதக்ஷிண நமஸ்கரம் செய்யவேண்டும். [ஈரவஸ்திரத்தோடும் தலைமயிரை அவிழ்க்கும், பாதாக்ஷை அணிந்து கொண்டும், பிரதக்ஷிணம் செய்யக்கூடாது. நடக்கச் சக்தியற்றவர்கள் சரீரமுழுதும் வெளியே காணும்படியான ஒற்றைமாட்டு வண்டியில் அமர்ந்து பிரதக்ஷிணம் செய்யலாம். (அசுபகாரியத்து க்கே ஈரவஸ்திரம் உடுத்தல் வேண்டும்,
மாலைப்பிரதக்ஷிணமுடிந்த பிறகு, தாழக்கோயிலில் முவுலழகியென்கிற ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மனை 3-5-7-9-11-21-51-108 - அவரவர் சக்திக்கியைந்த அளவு பிர தக்ஷிணம் செய்யலாம். திருமலை ஸ்ரீ வேதகிரீஸ்வரருக்கும், தாழக் கோயிலில் ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்மாளுக்கும் தினசரி அல்லது மங்களபாரம் - சுக்கிர வாரந்தோறும் அஷ்டோத்தர சதனமங்கள் அல்லது சகஸ்ர நாமங்களால் அருச்சிக்கலாம் கிரிப்பிரதக்ஷிணம் காலை மாலை இருவேளைகளிலும் செய்யலாம். சரீர வலிவு குறைந்திருந்தால் காலை மாத்திரம் செய்வதில் குற்றமில்லை, காலை மாலை இரு வேளை, சரீர இயல்பினை யறிந்து, கிரி பிரதக்ஷிணம் செய்யலாம்.
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர்
கிரிவலம் செல்வது எப்படி?
1.குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது. 2.வேறு பல நினைவுகளுடன் வலம் வரக்கூடாது. 3.நீராடி தூய ஆடை அணிந்து, விபூதி, குங்குமம், இட்டுக் கொண்டுதான் கிரிவலம் வர வேண்டும். 4.ஆண்கள் சட்டை அணியாது வேட்டியும், இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டும் வலம் வரலாம். ஏனென்றால் வேட்டியுடன் மட்டும் கிரிவலம் வரக்கூடாது. பெண்கள் மெட்டி, வளையல், நெற்றியில் குங்குமம் அணிந்து வலம் வர வேண்டும். 5.மிதியடி அணிந்து கொண்டு வலம் வரக்கூடாது. . குடை பிடித்துக் கொண்டு வலம் வரக்கூடாது. கையை வீசிக் கொண்டு வேக வேகமாக வலம் வரக்கூடாது. பேசிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் குறிப்பாக தொலைக்காட்சி தொடர்கள் பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும், வழியில் எல்லா இடங்களில் அமர்ந்து கொண்டும் வலம் வரக்கூடாது. மனம் முழுக்க ஈசன் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். 6.வேறு பல நினைவுகளுடன் வரக்கூடாது. காம எண்ணங்களுடன் வலம் வரக்கூடாது. 7.குறுக்கும், நெடுக்கும் நடந்து வலம் வரக்கூடாது. 8.போதை பொருளை உட்கொள்ளக் கூடாது. சிகரெட், பீடி குடிக்க கூடாது. 9.புலால் உண்ட அன்றும், போதைப் பொருட்கள் பயன்படுத்திய தினத்திலும் கிரிவலம் வரக்கூடாது. 10தூரம் அதிகமாக உள்ளதே என்று மலைத்த இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது. எப்படி நடக்கப்போகிறோம் என்று மலைப்புடன் வலம் வரக்கூடாது. 11.யாருடனும் பேசாது அஞ்செழுத்தை மனதிற்குள் கூறியபடி வலம் வருதல் நல்லது. மனம் முழுவதும் சிவன் மீது நாட்டம் கொண்டிருக்க வேண்டும். 12.கை வீசிக் கொண்டு செல்லாமல் நிதானமாக நடந்து வலம் வர வேண்டும். இது பிராணாயாமம் செய்வதற்கு சமமாக பலன் கிடைக்கும். இன்னும் கூறப்போனால் ஒரு கர்ப்பிணிப் பெண் போல் மெல்ல அடி எடுத்து வைத்து நடக்க வேண்டும். இது ஒட்டப் பந்தயமோ, நடைப் பந்தயமோ அல்லது எவ்வளவு வேகமாக நடந்தோம் என்பதை விட எவ்வளவு மெதுவாக நடந்தோம் என்பதிலேயே பலன் உள்ளது. 13.கிரிவலம் வரும்போது சுற்றுச் சாலையின் இடது ஓரமாக நடக்க வேண்டும். மலையை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும். அப்போது ஓம் நமச்சிவாய என்று தவறாமல் உச்சரிக்க வேண்டும். 14திருநீறு, சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை அணிந்திருத்தல் அவசியம். கையில் ஊதுபத்தி மற்றும் தூபம் எடுத்துக் கொண்டு சென்று அதன் மூலம் ஆராதித்து வழிபடுவது சிறப்பு. 15.திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் ஆகியோர் துறவியர்க்குரிய காவி ஆடை அணிந்து வலம் வரக்கூடாது. பிராணிகளுக்கோ, பசுக்களுக்கோ, பிச்சை கேட்போருக்கோ, வலம் வரும்போது சிறு பிரசாதம் அல்லது வாழைப்பழம், பிஸ்கட் ஆகியவற்றை தருதல் நலம். (காசு கொடுத்தல் கூடாது) 16.வலம் வரும்போது முக்கிய தூபம் காட்டி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் மிகவும் நல்லது. (17) காலணி அணிந்து வலம் வரக்கூடாது. புகை பிடித்தல் கூடாது. 18. கிரிவலத்தின்போது அவரவர் பித்ருக்களை வணங்கி அவர்களது ஆசியுடன் அவரவர் குல தர்மப்படி ஆடை அணிந்து, வீண் பேச்சுக்களை அறவே தவிர்த்து அருணாசல இறை நாமம் போற்றிப் பாடி, துதித்து கர்ப்பிணிப் பெண் நடப்பது போல் மெதுவாக நடந்து வலம் வருதல் மிகவும் விசேஷம்.
திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் கிரிவல பாதை
கடந்த காலத்தில் தனக்கோட்டி செட்டியார் –மங்கையற்கரசி என்னும் தம்பதியர் பல தான தருமங்கள் செய்து சீறும் சிறப்புடனும் வாழ்ந்துவந்தனர். அநேக தான தருமங்களை செய்தும் புண்ணிய தலங்கள் பல சென்றும் அவர்களுக்கு குழந்தைபாக்கியம் இல்லை. குழந்தை இல்லாத குறையை எண்ணி தனக்கோட்டி-மங்கையற்கரசி தம்பதியர் வருந்துகையில் சாட்சாத் #வேதகிரி பெருமான் சிவனடியார் திருவுருக்கொண்டு அவர்கள் இல்லம் சென்றார். வணிகர் பத்தினியோடு அவரை எதிர்கொண்டழைத்து வந்து தக்க ஆசனமளித்து அமரச்செய்து திருவடிக் கமலங்களுக்கு சுகந்த நீராட்டி கலவைச் சாந்தீட்டு நறுமலராலர்ச்சித்து சுவாமி இக்குடிசையில் திருவமுது செய்து அடியார்கள் எங்கள் குறையை நீக்கிட வேண்டுமென பிராத்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து வேண்டி நிற்க பெருமான் மனமிரங்கி நீங்கள் #வேதகிரிமலையை ஒரு மண்டலம் விதிப்படி கிரிவலம் வர புத்திரபேறு உண்டாகுமென திருவாய்மலர்ந்து மறைந்தார்.
அதன்படியோ இருவரும் விதிப்படி ஒரு மண்டலம் 48 நாட்கள் #சங்குதீர்தத்தில் புனிதநீராடி வேதகிரி மலையை கிரிவலம் வந்து முடிவில் வேதகிரிஸ்வரருக்கும் திரிபுரசுந்தரி அம்மனுக்கும் விஷேஷ அலங்கார உத்ஸவாதிகள் செய்து வைத்து அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்கள் இல்லம் சென்று உறங்கினர். காலையில் குழந்தை அழுகுரல் கேட்டு துயில் எழுகையில் பரமேஸ்வரியே குழந்தை உருவாய் தம்பக்கத்தில் இருக்க கண்டு ஆனந்தம் பொங்கி இருகரங்களாலேந்தி உச்சி மோந்து கொஞ்சி மகிழ்ந்தனர். வேத ஆகமச் சடங்குகள் செய்து என்ன பெயர் வைக்கலாம் என யோசிக்கையில் அசரீரியாய் சொக்கம்மாள் என்னும் திருநாமஞ்சூட்டு என கேட்ட அனைவரும் ஆனந்தமடைந்தனர்.
அன்னதானம்.சொர்ணதானம் என 32 தானங்களும் அவரவர் விருப்பபடி வேண்டிய அளவு கொடுத்து குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்த்து வந்தார்கள்.அப்படி வளர்ந்து வந்த அம்மையாருக்கு பன்னிரண்டு வயது ஆனதும் தங்குல முதியோர் பந்துக்கள் சேர்ந்து நல்ல தினத்தில் திருமணம் முடிக்க ஆலோசனை செய்தனர்.அப்போது சொக்கம்மன் தனது தந்தையாரை நோக்கி #வேதமலையை வலம்வந்து பிறகு தான் திருமணம்பற்றி முடிவெடிக்கவேண்டும் என கூற அதன்படியே #வேதமலையை வலம்வர முடிவு செய்தனர்.அதன்படி வணிகர்கோன் திருமலைச்சொக்காமெனும் திருத்தேவியரை அழைத்துக்கொண்டு திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள சங்குதீர்த்தத்தில் நீராடி வேதமலையை வலம்வரும்போது தந்தையார் முன்னும் அம்மையார் பின்னுமாக மலையை வலம்வரத்தொடங்கினர். மலைக்கு வடக்குத்திசையில் பிரதஷணமாகப்போகும்போது மலை அடியில் ஒரு பாறை மீது வேதகிரிப்பெருமான் அமர்ந்திருப்பது அம்மையார் கண்ணுக்குமட்டும்தெரிய அம்மையார் அடையுமிடம் வந்ததை உணர்ந்து பெருமானிடம் நெருங்கிட #வேதகிரிப் பெருமான் தேவியை அழைத்துக்கொண்டு மலைமீது ஒரு சார்பில் தங்கவும்.முன்னம் சென்ற செட்டியார் திரும்பி பார்த்து குழந்தையை காணாது திகைத்து மயங்கி முன்னும் பின்னும் ஒடி ஒடி தேடியும் காணாமல் ஒவேன கதறிய வண்ணமாக #திருமலைச்சொக்கம்மாள் என்று பலமுறை கூவி அழைக்க மலைமீது ஏன் ஏன் என்னும் குரல் கேட்க திசையறிந்து மலை மீதேறி பார்க்க சுவாமி முன்னும் அம்மையார் பின்னும் நிற்பதறிந்து ஓவென கதறிய வண்ணம் மெய் சோர்ந்து அடியற்ற மரம்போல சுவாமி பாதத்தில் விழுந்து கதற – இறைவன் அவர் முன் தோன்றி அன்பரே வருந்தவேண்டாம். உம்முடைய அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்துவந்தாள்.

இனி உன்னுடன் வரமாட்டாள். வேண்டிய வரம்கேள் என கேட்டார். அதற்கு செட்டியார் சுவாமி தங்களை அடைந்தும் அகில உலக மாதாவையே மகளாக பெற்றும் நான் அடைந்ததைக் காட்டிலும் வேறு பேறு எனக்கு என்னவேண்டும்.ஆயினும் சுவாமிகள் அம்மையாரோடு இவ்விடத்திலேயே இருந்திடல்வேண்டும். உங்களை வந்தடைந்து தரிசனம் செய்யும் அன்பர்களுக்கு #புத்திரபேறு,#மாங்கல்யபேறு.#செல்வப்பேறு.#பிணிநீக்கம் என்று அவரவர் கோரியபடி வரத்தை அருளவேண்டும் என வேண்டுகோள் விடுக்க அதன்படியே #வேதகிரிஸ்வரர் வரம் அருளி தன்னை #வேதகிரி மலைமீது வந்து பார்க்க என்று அருளிச்செய்தார். வணிகர்கோன் அக்கட்டளையை சிரமேற்றாங்கி #வேதமலை உச்சியிலே சென்று பார்க்க அங்கும் அம்மையாரோடு காட்சியளிக்க கண்ட தனக்கோட்டி செட்டியார் பேரானந்தம் கொண்டவராய் சுவாமி அப்பனே! வேதகிரி பெருமானே! அம்மையாரை விட்டு நீங்காச் செல்வம் வேண்டுமெனப் பிராத்திற்க.பெருமான் அம்மையார் சன்னிதானத்திலே இருக்க மோட்சமளித்தார்.
வணிகர்கோன் விதேக முக்கியடைந்தார்.(#வேதகிரீஸ்வரர் மலைமீது #வேதகிரியை தரிசத்து வலம்வருகையில் #சொக்கம்மன் சன்னதி முன் இருகரம் கூப்பிய படி தனக்கோட்டி செட்டியார் சிலை இருப்பதை காணலாம்) அம்மையாரை வளர்த்த மங்கற்கரசியாருக்கும் பெருமாள் சாயுச்சிய பதவியளித்தார். அகில உலக மாதாவை மகளாகப் பெற்ற இருவரும் பெரும் பதவியும். புகழும் உலகம் உள்ளளவும்பெற்றார்கள். அந்த நாள் முதல் ஈசன் வேதகிரிப்பெருமான் கொடுத்த வரத்தின் வாக்குப்படி #வேதமலையின் மேல் வடக்கு திசையில் #திருமலைச் #சொக்கம்மன் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. #வேதகிரி ஈஸ்வரர் தேவியரோடு சேர்த்த சுபதினமான பங்குனி உத்திர சுபவேளையில் மேற்சொன்ன வணிகர் குல பரம்பரையார் அம்மனுக்கு #மஹா அபிஷேகமும் #திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடத்தி வருகின்றார்கள். சென்ற நூற்றாண்டில் #திருமலையில் பட்சிகளுக்கு அமுதூட்டிய பரம்பரையில் வந்த திரு.வேதப்ப முதலியார் –திரு.சமரபுரி முதலியார்-திரு.பழனி முதலியார் – திரு.மலைமருந்து முதலியார் – திரு.வீராசாமி முதலியார் –திரு.ராஜேந்திரன் முதலியார் என வம்சாவழி வம்சத்தினர் தற்போது திருமலை சொக்கம்மன் ஆலய பூஜை செய்து வருகின்றனர்.வேதகிரி மலையை கிரிவலம்வருகையில் சிறிய மலைமீது அமைந்துள்ள திருமலை சொக்கம்மன் ஆலயத்தினையும் தவறாமல் தரிசித்து வாருங்கள்.